திருடர்களால் வங்கி கட்டமைப்புக்கு பாதிப்பு – சந்திரிகா

292 0

chanrica-01அரசாங்கத்திற்குள் திருடர்கள் இருப்பார்களானால் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் என்பன பாரியளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வங்கியுடன் தனக்கு தனியான தொடர்புகள் உள்ளன.

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் போது 30 லட்சம் ரூபா மாத்திரமே கணக்கில் இருந்தது.

இந்தநிலையில் தமக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வரபிரசாதங்களையும் மஹிந்த ராஜபக்ஸ இல்லாது செய்துவிட்டார்.

எனினும் வாழ்க்கையை கொண்டு நடத்தவேண்டும்.

திருட முடியாது, திருட்டை மேற்கொண்டதும் கிடையாது.

ஒரே சொத்து மாத்திரம் இருந்தது. அதனை விற்று தனது மகளின் திருமணம் உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டதாகவும் சந்திரிக்கா குறிப்பிட்டார்.

இந்தநிலையில், எப்போதும் அரசாங்கம் மாறும் போது அந்த அரசாங்கத்திற்குள் திருடர்கள் காணப்படுவார்களானால் வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.