நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை தவிர ஆளும் அரசாங்கத்திற்கு மாற்று திட்டம் எதுவும் கிடையாது என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எமது நாட்டின் முழு கடன்தொகை 10 லட்ச கோடிக்கு மேல்
இதன்படி, ஒவ்வொரு குடிமகனும் 5 லட்சம் ரூபா வீதம் கடனாளிகலாக உள்ளனர்.
அண்மையில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் கடன் சுமையை குறைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆராய்து பார்க்கும் போது, பெற்றுக்கொண்ட கடனுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள வானூர்தி நிலையம் ஆகியவற்றை சீனாவுக்கு விற்பனை செய்துவிட்டார்கள்.
இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை தவிர்த்து வேறு வழிகள் தெரியாதுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.