முறி விவகார – ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க கோரிக்கை

315 0

lakshman-yapaமத்திய வங்கியின் முறி விவகாரம் தொடர்பில் மேலும் விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதியரசர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இதுதொடர்பில் வேறு கருத்தை வெயிட்டு வருகின்றனர்.

எனவே இந்த விடயத்தின் ஜனாதிபதி ஆணைக்குழு வொன்றை அமைப்பதன் மூலமே உண்மையான விடயங்களை சட்டரீதியாக மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.