மத்திய வங்கியின் முறி சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சூரியவௌ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்து அவர், சட்டம் அனைவருக்கும் சமமானதாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, முறி விற்பனை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை கோருவதற்காக நாளைய தினம் சபாநாயகரை சந்திக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நொவம்பர் மாதம் 10ஆம் திகதி வரவு செலவு திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக விவாதம் ஒன்றை வழங்குமாறு சபாநாயகரை கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.