மணல், மண் மற்றும் கருங்கல் கொண்டு செல்ல புதிய சட்டமுறைகள்

302 0

tamildailynews_8574444055558மணல், மண் மற்றும் கருங்கல் ஆகியவற்றை கொண்டு செல்வதற்காக புதிய சட்டமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டமுறைகள் எதிர்வரும் நொவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரே மாவட்டத்துக்குள் பகல் வேளைகளில் மணல், மண் மற்றும் கருங்கல் ஆகியன கொண்டு செல்லப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு குறித்த பொருட்களை இரவு நேரங்களில் கொண்டு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மணல், கருங்கல் மற்றும் மண் ஆகியவற்றுக்காக தற்போது சட்டவிரோத அகழ்வு பணிகள் தொடர்வதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்திற்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.