யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி இரண்டு பல்கலைகழக மாணவர்கள் மரணமான சம்பவம் தொடர்பில் தேசிய காவற்துறை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.
அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு அனுப்பபட்ட சிறப்பு அதிகாரி சேகரித்த தகவல்களுக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, குறித்த அதிகாரியின் அறிக்கை தமக்கு தற்போது கிடைக்க பெற்றுள்ளதாக தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் சிறப்பு சந்திப்பின் போது குறித்த அறிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இதனையடுத்து, கொக்குவிலில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்வைக்க முடியும் என ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.