புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்திற்காக யாப்பு சபையின் செயற்பாட்டு குழு தயாரித்த இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற பிரதிப்பொதுச்செயலாளரும் யாப்பு சபையின் செயலாளருமான நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பாட்டு குழுவின் தலைமை பதவியை வகிப்பதுடன் நாடாளுமன்றத்தை அங்கத்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் தலைவர்கள் அதன் உறுப்பினர்களாக செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பிரதமரின் தலைமையில் குறித்த செயற்பாட்டு குழு தொடர்சியாக கூடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தேர்தல் முறைமை, அதிகார பகிர்வு மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.