மாமல்லபுரம் சுற்றுலா தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி

199 0

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத் தில் உள்ள பல்லவர் கால கலைச் சின்னங்களை நேரில் பார்வை யிட்டுவிட்டுச் சென்றதால், சுற்று லாப் பயணிகள் வழக்கம்போல் சுற்றுலாத் தலங்களைப் பார்வை யிட இன்று முதல் அனுமதிக்கப் படுவதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இரு நாட்டுக்கான முக்கிய வர்த் தக ஒப்பந்தங்கள் தொடர்பாக மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் சந்தித்து ஆலோசித் தனர். இரு தலைவர்களின் பாது காப்பு காரணங்களுக்காக மாமல்ல புர சுற்றுலாத் தல வளாகங்களுக் குள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப் படுவதாக அக்.8-ம் தேதி தொல்லி யல் துறை அறிவித்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். மேலும், கலைச் சின்னங்களை சாலையில் நின்றவாறு கண்டு ரசித்தனர்.

இந்நிலையில், சுற்றுலாத் தல வளாகங்களுக்குள் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனு மதி அளிக்கப்படுகிறது என தொல்லியல் துறை அறிவித்துள் ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு சீட்டு கொடுக்குமிடம் இன்று முதல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

போலீஸார் செல்ஃபி

இரு நாட்டு தலைவர்களின் வருகையால் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற் பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இத னால், கடைகள் மற்றும் உணவகங் கள் மூடப்பட்டு நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இரு தலைவர்களும் புறப் பட்ட பிறகு பாதுகாப்பு கெடுபிடி கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். மேலும், போலீஸார் தலைவர்கள் பார்வை யிட்ட கலைச் சின்னங்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இயல்புநிலை திரும்பியது

பாதுகாப்பு கெடுபிடிகள் குறைக் கப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்கள் வழக்கம்போல் சாலைகளில் நடந்து சென்றனர். மேலும், மாமல்ல புரம் நகருக்கு வெளியே நிறுத்தப் பட்ட பேருந்துகள் நேற்று பிற் பகலுக்குப் பிறகு நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. மூடப்பட் டிருந்த கடைகளும் படிப்படியாக திறக்கப்பட்டன. உணவகங்களும் வழக்கம்போல் செயல்பட்டன. இதையடுத்து குறைந்த அளவு உள்ளூர் மக்கள் கலைச் சின்னங் களை கண்டு ரசித்தனர். இதே போல், கோவளத்திலும் மாலை 4 மணிக்கு மேல் பேருந்துகளும், தனியார் வாகனங்களும் அனு மதிக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியது.

பேனர்கள் இல்லை

பிரதமர் மற்றும் சீன அதிபர் ஆகியோரை வரவேற்பதற்காக, ஈசிஆர் சாலை உட்பட பல் வேறு இடங்களில் பேனர்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு, நீதிமன்றமும் அனுமதி அளித்தது. ஆனால், மாமல்லபுரம் மற்றும் ஈசிஆர் சாலைகளில் இரு தலைவர்களை வரவேற்று பேனர் கள் ஏதும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து அனைத்து தரப்பின ரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதேநிலை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.