வடக்கு ஆளுநரது சிங்களக் கடிதத்தை திருப்பி அனுப்ப கூறியது நானே- மனோ

315 0

mano-6-450x272யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரேயினால் வெறும் சிங்களத்தில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்பிவைக்குமாறு தாமே மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த கால ஆட்சியாளர்கள் சிங்கள மொழிக்கு ஒப்பாக தமிழ் மொழிக்கும் உரிய அந்தஸ்து வழங்காதபடியினால்தான் இந்த நாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும், தனது நண்பரான வடமாகாண ஆளுநரது இந்தச் செயல் பார்வைக்கு சிறியதாகத் தோன்றினாலும் அதில் மிகப்பெரிதான ஆழமான விடயம் காணப்படுகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அம்பாறை – காரைத்தீவு கடற்கரையில் கலைகளின் திருவிழா என்ற தேசிய நல்லிணக்க நிகழ்வு ஊர்வலம் நேற்றைய தினம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன் அதன் பின்னர் மக்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.