யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் 65000 வீடுகளை நிர்மாணிப்போம்- ரணில்

284 0

601957111ranil-1இலங்­கையின் ஏற்­று­ம­தி­க­ளுக்கு புதிய சந்­தை­களை  உரு­வாக்கிக் கொள்ளும் நிமித்தம் மேலும் 3 வர்த்­தக ஒப்­பந்­தங்கள் தொடர்பில் நாம் பேச்­சுக்­களை நடத்­தி­ வ­ரு­ கிறோம். இந்­தி­யா­வு­ட­னான ஒப்­பந்­த­மொன்றும் சீனா மற்றும் சிங்­கப்­பூ­ருடன் தலா ஒரு இரு­த­ரப்பு ஒப்­பந்­தங் ­களும் இவற்றில் அடங்கும். அத்­துடன்   அம்­பாந்­தோட்­டையில் சீனா­வுக்­காக 15000 ஏக்கர் காணிகள்  ஒதுக்­கப்­பட்­டுள்­ளன என்று பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க  தெரி­வித்தார்.

யுத்தம் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் இடம்­பெ­யர்ந்­த­வர்­களுக்கு 65 ஆயிரம் வீட்டுத் தொகு­தி­களை நிர்­மா­ணிப்போம். தோட்டப் பகு­தி­களில் வீடு­க­ளுக்­கான தேவை­களில் 65 சத­வீ­தத்தை 2020 ஆம் ஆண்­டாகும் போது பூர்த்தி செய்­வதே எமது இலக்­காகும்  என்றும் பிர­தமர் சுட்­டிக்­காட்­டினார்.

ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி கட்­டுப்­பாட்டு சட்­டத்­திற்கு பதி­லாக புதிய சட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். அது சிங்­கப்பூர் ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி ஒழுங்­கு­வி­திகள் சட்­டத்­திற்கும் மூலோ­பாய பொருட்கள் கட்­டுப்­பாட்டு சட்­டத்­திற்கும் சமப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்கும்  என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  வியா­ழக்­கி­ழமை நாட்டின் பொரு­ளா­தார நிலைமை, தேசிய  அர­சாங்­கத்தின் எதிர்­கால திட்­டங்கள் தொடர்­பாக  விளக்­க­ம­ளிக்கும் வகையில்  விசேட கூற்றை முன்­வைத்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க   மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பிர­மரின் முழு­மை­யான விசேட கூற்று வரு­மாறு,

மக்­களின் வரு­மான மட்­டங்­களை கூடிய விரைவில் உயர்த்­து­வதே எமது இலக்­காகும். கடந்த 60 ஆண்டு காலத்­தி­லான வரு­மான அதி­க­ரிப்பு நிலை­மையை ஆராய்ந்து பார்க்கும் போது பெரும்­பா­லான தென்­கி­ழக்­கா­சிய நாடு­களை விடவும் நாம் மிகவும் பின்­னி­லை­யி­லேயே இருக்­கிறோம். அதேபோல், எமது அரு­கி­லுள்ள தெற்­கா­சிய நாடு­களின் வரு­மான மட்­டங்­க­ளுடன் ஒப்­பிடும் போது நாம் மட்­டு­மட்­ட­ளவில் நெருங்­கி­யுள்ளோம். தற்­போது தனி­நபர் மொத்த தேசிய வரு­மானம் 4 ஆயிரம் அமெ­ரிக்க டொல­ராக உள்­ளது. அதை நாம் 8 ஆயிரம் அமெ­ரிக்க டொல­ராக அதி­க­ரித்துக் கொள்ள வேண்டும்.

பொரு­ளா­தார வளர்ச்சி

தற்­போது எமது பொரு­ளா­தார வளர்ச்சி வேகம் வரு­டத்­திற்கு 5 சத­வீ­த­மாக இருக்­கி­றது. இந்த வேகத்தில் சென்றால் தனி­நபர் வரு­மானம் இரு மடங்­கா­வ­தற்கு நாம் 2033 ஆம் ஆண்டு வரை காத்­தி­ருக்க வேண்­டி­வரும். பொரு­ளா­தார வளர்ச்சி வேகத்தை 7 சத­வீ­த­மாக பேணிக்­கொள்ள முடிந்தால் தனி­நபர் வரு­மா­னத்தை 2025 ஆம் ஆண்­டாகும் போது இரு மடங்­காக்கி கொள்­ளலாம்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வ­டைந்தன் பின்­னரே கடை­சி­யாக எமது நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி வேகம் 7 சத­வீ­த­மாக இருந்­தி­ருந்­தது. துர­திர்­வஸ்­ச­மாக சமா­தா­னத்­துடன் கிடைத்­தி­ருக்க வேண்­டிய பொரு­ளா­தார பிர­தி­ப­லன்­களை எம்மால் பெற முடி­யாமல் போயி­ருந்­தது.  தற்­போது உலக வங்கி, சர்­வ­தேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபி­வி­ருத்தி வங்கி என்­பன மட்­டு­மல்­லாது, ஐரோப்பா,ஜப்பான் மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு  கடன் வழங்கும் ஏனைய நிதி நிறு­வ­னங்­களும் சலுகை வட்டி வீதத்தில் எமது அர­சுக்கு கடன் வழங்க மீண்டும் முன்­வந்­துள்­ளன. அதன் மூலம் எமது பொரு­ளா­தா­ரத்தை விஸ்­த­ரித்துக் கொள்­ளவும் பலப்­ப­டுத்திக் கொள்­ளவும் கூடி­ய­தாக இருக்கும். நான் இதற்கு முன்னர் பிர­த­ம­ராக பதவி வகித்த 2001 – 2004 காலப்­ப­கு­தியில் தான் இவ்­வா­றான சர்­தேச நிதி அணு­ச­ர­னைகள் இறு­தி­யாக இலங்­கைக்கு கிடைத்­தி­ருந்­தன. தற்­போது மீண்டும் ஜனா­தி­பதி சிறி­சே­ன­வி­னாலும் என்­னாலும் மீண்டும் வெளி­நாட்டு நிதி உத­வி­களை மென்­மேலும் பெற்றுக் கொள்ள முடிந்­துள்­ளது.

பிராந்­திய உறவு

பிராந்­தி­யத்­தி­லுள்ள பல்­வேறு நாடு­க­ளு­டனும் இல­கு­வாக தொடர்­பு­களை பேணும் நிமித்தம் சர்­வ­தேச விமா­ன­நி­லையம் மற்றும் 3 துறை­மு­கங்­களின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை நாம் ஆரம்­பித்­துள்ளோம்.  மூல­தன கொடுப்­ப­னவு மற்றும் குறை­வான வரி முறை­மை­யொன்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட முத­லீட்டு ஊக்­கு­விப்­பொன்றை நாம் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்ளோம். இது தொடர்­பான மேல­திக விப­ரங்கள் வரவு – செல­வுத்­திட்­டத்தில் முன்­வைக்­கப்­படும்.

புதிய சட்டம்

ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி கட்­டுப்­பாட்டு சட்­டத்­திற்கு பதி­லாக புதிய சட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். அது சிங்­கப்பூர் ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி ஒழுங்­கு­வி­திகள் சட்­டத்­திற்கும் மூலோ­பாய பொருட்கள் கட்­டுப்­பாட்டு சட்­டத்­திற்கும் சமப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்கும். எமது உள்­நாட்டு தொழில்­மு­யற்­சி­யா­ளர்­க­ளுக்கும் இதில் பாரிய கடமை பொறுப்­புகள் இருக்­கின்­றன. அவர்கள் போட்­டித்­தன்­மையை மேம்­ப­டுத்தி ஏற்­று­மதி உற்­பத்­தி­களை அதி­க­ரித்­துக்­கொள்ள முடியும். அதன்­மூலம் தொழில் வாய்ப்­பு­களும் உரு­வாகும்.

ஜனா­தி­பதி சிறி­சே­னவும் நானும் கடந்த காலங்­களில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளிலும் வெளி­நாட்டு பய­ணங்­களை மேற்­கொண்டு எமது நாடு தொடர்பில் ஆரோக்­கி­ய­மான தோற்­றப்­பா­டொன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். எமது அந்த முயற்­சியின் பெறு­பே­று­களை இப்­போதே காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை 2017 ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்தில் இருந்து இலங்­கைக்கு மீண்டும் வழங்­கப்­படும் என்று அண்­மையில் பிரசல்ஸ் நக­ருக்கும் மேற்­கொண்­டி­ருந்த விஜ­யத்தின் போது ஐரோப்­பிய ஆணைக்­கு­ழுவின் உயர் அதி­கா­ரிகள் நம்­பிக்­கை­யுடன் உத்­த­ர­வா­த­ம­ளித்­தனர்.

அது­மட்­டு­மல்­லாது  ஜப்பான் – இலங்கை முழு­மை­யான ஒத்­து­ழைப்பை ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக ஜப்பான் பிர­த­ம­ரினால் சிரேஷ்ட அதி­கா­ரி­யொ­ருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.  எமது ஏற்­று­ம­தி­க­ளுக்கு புதிய சந்­தை­களை உரு­வாக்கிக் கொள்ளும் நிமித்தம் மேலும் 3 வர்த்­தக ஒப்­பந்­தங்கள் தொடர்பில் நாம் பேச்­சுக்­களை நடத்­தி­வ­ரு­கிறோம். இந்­தி­யா­வு­ட­னான ஒப்­பந்­த­மொன்றும் சீனா மற்றும் சிங்­கப்­பூ­ருடன் தலா ஒரு இரு­த­ரப்பு ஒப்­பந்­தங்­களும் இவற்றில் அடங்கும்.

துறை­மு­கங்கள் மற்றும் விமா­ன­நி­லை­யங்­க­ளுக்­காக செலுத்த வேண்­டி­யுள்ள நிலு­வைக்­கடன் தொகை­களை ஈடு­செய்­வ­தற்கு எமக்கு பலம் இருக்­கி­றது. ஆகையால்  அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் விமா­ன­நி­லைய கடன்­களை எமது பிள்­ளை­களின் மீது சுமத்­த­மாட்டோம் என்று உறு­தி­ய­ளிக்க முடியும். அதே­போன்று அம்­பாந்­தோட்­டையை சர்­வ­தேச விமான மற்றும் கப்­பற்­துறை சேவை கேந்­தி­ர­நி­லை­ய­மாக உரு­வா­குக்கும் பயனும் எமக்கு கிடைக்கும்.

நக­ரங்கள் மற்றும் அதன் சுற்­று­பு­றங்­க­ளி­லுள்ள மத்­திய வகுப்பு குடும்­பங்­க­ளுக்கு 5 இலட்சம் வீடு­க­ளையும் நக­ரங்­களில் இருக்கும் குறைந்த வரு­மானம் கொண்­ட­வர்­க­ளுக்கு 65 ஆயிரம் வீடு­க­ளையும் நிர்­மா­ணிப்­ப­தற்கு வாய்ப்­பேற்­ப­டுத்­து­வதே எமது திட்­ட­மாகும். அதற்கு சமாந்­த­ர­மாக யுத்தம் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் இடம்­பெ­யர்ந்­த­வர்­ளுக்கு 65 ஆயிரம் வீட்டுத் தொகு­தி­களை நிர்­மா­ணிப்போம். தோட்ட பகு­தி­களில் வீடு­க­ளுக்­கான தேவை­களில் 65 சத­வீ­தத்தை 2020 ஆம் ஆண்­டாகும் போது பூர்த்தி செய்­வதே எமது இலக்­காகும்.

பாட­சாலை கல்வி

13 ஆண்­டுகள் பாட­சாலை கல்­வியை பெற்­றுக்­கொள்­வதை நாட்டின் சகல பிள்­ளை­க­ளுக்கும் கட்­டா­யப்­ப­டுத்தும் புதிய கொள்­கை­யொன்றை நாம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளோம். அடுத்த வருடம் இதன் முதன்மை திட்­டத்தை நாம் ஆரம்­பிப்போம்.

தற்­போ­தைய நிலையில்  எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு தேவை­யாக இருப்­பது ஒழுங்­கு­ப­டுத்­தலே தவிர கட்­டு­பாடு கிடை­யாது. பொரு­ளா­தா­ரத்தை மிகவும் சுதந்­தி­ர­மாக்­கு­வதன் மூலமே  செல்­வ­மிக்க நாடாக உரு­வெ­டுக்கும் எதிர்­பார்ப்பை யாதார்த்­த­முள்­ள­தாக தக்க வைத்­துக்­கொள்ள முடியும். 1978 ஆம் ஆண்டு அறி­மு­க­ப­டுத்­தப்­பட்ட திறந்த பொரு­ளா­தார கொள்­கையின் விளை­வாக மூடிய பொரு­ளா­தா­ரத்­தினால் எமது நாட்­டிற்கு ஏற்­பட்­டி­ருந்த பின்­ன­டைவை போக்கிக் கொள்ள முடிந்­தி­ருந்­தது. தற்­போது  அதன் மூன்­றா­வது தலை­மு­றையின் மறு­சீ­ர­மைப்­பொன்றை நோக்கி கொண்டு செல்லும் பாரிய சவா­லொன்று எம்­முன்­னி­லையில் இருக்­கி­றது. அந்த சவால்­க­ளுக்கு ஒன்­று­பட்டு முகம்­கொ­டுப்­பதன் மூலமே  இலங்­கையை ஆசி­யாவின் நவீன பொரு­ளா­தார வெற்­றியின் அடை­யா­ள­மாக்­கிக்­கொள்­ள­மு­டியும்.

இந்த பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்பு திட்டம் தொடர்பில் மேலதிக விபரங்கள் அடங்கிய நூலொன்றை நாம் விரைவில் வெளியிடுவோம்.

இலங்கை பொருளாதார ரீதியாக உயர்ந்து நிற்பதற்கு கிடைந்திருந்த பல  சந்தர்ப்பங்களும் பல்வேறு காரணங்களால் துரதிஷ்டவசமாக எம்மைக் கைவிட்டு சென்றிருந்தது. மீண்டும் அவ்வாறு நடப்பதற்கு இடமளிக்க முடியாது. ஆகையால்  தற்போதைய உலகளாவிய யதார்த்தங்கள் மற்றும் இலங்கையிடமுள்ள பலங்கள் மற்றும் வாய்ப்புகளை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அவை அனைத்திலும் பயன்காண வேண்டும்.

எம் அனைவருக்கும் பல்வேறு தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். அரசியல் நோக்கங்கள் இருக்கலாம். எனினும்  அவை அனைத்திற்கும் மேலாக எமது நாட்டைப் பற்றி சிந்திக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோன். தேசிய அரசாங்கத்தின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வாய்ப்புகளில் இருந்து நாம் உச்சப்பட்ச பலன்களை பெற்றுக்கொள்ள வேண்டும். புரட்சிகர முன்னேற்றத்தை நோக்கி  எம்முடன் அனைவரும்  ஒன்றிணையுங்கள்   என்றார்.