ஐ.தே.கட்சிக்கு மர்ம பலம் உள்ளது- கபீர்

216 0

வாக்குப் பலமுள்ள சிறுகட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது புதிய ஜனநாயகவாத முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆகும் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்பொழுது வாக்குப் பலமுள்ள சிறு கட்சிகள் எம்முடன் உள்ளனர். வாக்குப் பலமுள்ள இன்னும் ஓரிரு கட்சிகள் எதிர்வரும் நாட்களில் ஆதரவு வழங்கவுள்ளன. வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் புதிய நோக்குகள் குறித்து பெரும்பாலான கட்சிகள் தமது விருப்பத்தைத் வெளியிட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரிய தலைகள் மாறிச் சென்றாலும், அக்கட்சியின் வாக்குகள் எமது பக்கத்துக்குத் தான் உள்ளன.

கிராமத்தின் வாக்குப் பலமும், நாட்டுக்கான வாக்குப் பலமும் வித்தியாசமானது. எமக்கு பெரும் அனுபவம் உள்ளது. நாம் சவால்களுக்கு முகம்கொடுத்து பிரச்சினைகளை வென்றெடுத்த ஒரு கட்சியாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு எல்லா தேர்தல்களிலும் ஐ.தே.கட்சி தோல்வியடைந்தது. மேல் மாகாண சபையின் அதிகாரமும் இல்லாமல் போனது. இருப்பினும், இரு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை நாம் வெற்றி கொண்டோம். அதுதான் ஐ.தே.க.யின் பலம் என்பது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.