காலியில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது இந்தியா

211 0

காலியில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையமொன்றை இந்தியா அமைக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் (Marine Rescue Coordination Centre (MRCC)  ஒன்று பெற்றுள்ளது.

பாரத் இலத்திரனியல் நிறுவனம் என்ற இந்திய நிறுவனமே, இந்த கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது.

இதற்கு அமைச்சரவை கொள்வனவு குழு அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆறு மில்லியன் டொலர் செலவில் இந்த அமையம் அமைக்கப்படவுள்ளது. கடலில் ஆபத்தை எதிர்கொள்ளும் மீனவர்கள் மற்றும் கடல் பணியாளர்களை மீட்பதற்காக இந்த மையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த மையத்தை காலியில் அமைப்பதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார்.

இலங்கை விமானப்படை, இலங்கை கடலோரக் காவல்படை மற்றும் வணிக கப்பல் செயலகம் என்பன இந்த மையத்தின் இணைப் பங்காளர்களாக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.