துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய மாணவர்களின் குடும்பங்களை மைத்திரி சந்திக்கவுள்ளார்!

332 0

12359860_10153681466516327_7288268389246470694_nசீறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பயணம் செய்யவுள்ளார்.

கீரிமலைப் பிரதேசத்தில் வீடற்றோருக்கு புதிய வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் குறித்த வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட் கிழமை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவே மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார்.

அத்துடன் குறித்த நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளதுடன், பின்னர் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.