முதலமைச்சர் ஆளுநரின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டுக்குச் செல்லவில்லை

353 0

12_c_v__wigneswara_1946522f-1அரசியலமைப்பின் 154ஆவது உறுப்புரிமையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். இருப்பினும், வடக்கு மாகாண முதலமைச்சர் ஆளுநரின் அனுமதியைப் பெற்று வெளிநாட்டுக்குச் செல்லவில்லை.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடு செல்வது தொடர்பாக ஆளுநருக்கு அறிவித்தல் விடுக்கவோ அல்லது அனுமதி பெறவோ இல்லையென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் கடந்த 18ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இவரது பயணம் முடியும் வரைக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவை முதலமைச்சராக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவுசெய்திருந்தார்.

ஆனால், அவர் இதுவரை வடக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து தனது முதலமைச்சர் பதவியை ஏற்கவில்லை.

அத்துடன் முதலமைச்சர் வெளிநாடு செல்வதாயின் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தபின்னரே செல்லமுடியும். அவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் செய்யவில்லையெனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.