திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்திற்கு வருகை தருவது இருதரப்பு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், அவரின் இந்திய விஜயமானது எல்லையில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இதனை இன்று குறிப்பிட்டுள்ளார்.
தலாய் லாமாவின் இந்திய விஜயம் குறித்து தாங்கள் உண்மையாகவே கவலையடைந்துள்ளோம்.
அத்துடன், அவர் அருணாச்சலப் பிரதேசத்துக்கு செல்வது தலாய்லாந்து பிரிவினை வாத நடவடிக்கைகளை ஆதரிப்பதாக அமைந்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.