ஆவாவிற்கு மேலதிகமாக வடக்கில் 5 பாதாள உலகக் கோஷ்டிகள்

408 0

downloadஆவா குழுவிற்கு மேலதிகமாக வடக்கில் ஐந்து பாதாள உலக கோஷ்டிகள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நிமலன், தில்லு, ஜுட், ப{ஹல், சன்னா என்ற பெயர்களில் இந்த பாதாள உலக கோஷ்டிகள் செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆவா குழுவை விநோதன் என்ற ஒருவர் இயக்கி வருவதாகவும், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2013ஆம் ஆண்டு வீடொன்றிற்குள் நுழைந்து ஒருவரை வெட்டி குற்றச்சாட்டின் கீழ் விநோதன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜெயநந்தன், ஜக்குணராசா, அங்கலிங்கம் பிரங்சா, ஜெயம், காந்தன், சிவலிங்கம் மற்றும் ராசையா ஆகியோர் ஆவா குழுவில் பிரதான இடத்தை வகிக்கும் நபர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரே வட மாகாணத்தில் பாதாள உலக கோஷ்டிகள் தலைதூக்க ஆரம்பித்திருந்தன.

தென்னிந்திய திரைப்படங்கள் இந்த பாதாள உலக கோஷ்டிகள் உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளதென பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் வட மாகாணத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த நிதி நிறுவனங்களின் கடனுதவிகளை பெற்று வாகனங்களை கொள்வனவு செய்யும் நபர்கள் பின்னர் கடனை செலுத்த தவறும் பட்சத்தில், இந்த பாதாள உலக கோஷ்டிகளை கொண்ட அந்த வாகனங்களை நிதி நிறுவனங்கள் மீண்டும் தம்வசப்படுத்திக் கொண்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.