வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்திற்கு அருகே நேற்று இடம்பெற்ற பட்டா ரக வாகன விபத்தில் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த பட்டா ரக வாகனமொன்றிக்கு முன்னால் சென்ற முச்சக்கரவண்டி திடீரென வீதியின் மற்றைய பக்கத்திற்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டிக்கு பின்னால் சென்ற பட்டாரக வாகனம் பாரிய விபத்தினை தடுக்கும் முகமாக அருகே காணப்பட்ட மதகில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பட்டா வாகனத்தின் சாரதி காயங்களுக்குள்ளானதுடன் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.