பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து வேட்டை ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று காலை நடைபெற்றது.
அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இடம்பெற்றது.