ஸ்ரீலங்க சுதந்­திரக்கட்சி பாது­காக்­கப்­பட்­டுள்­ளது – காரணம் சொல்கிறார் சமரசிங்க

257 0

கோத்­தபாய ராஜ­ப­க் ஷவை ஆத­ரிப்­ப­தாக எடுத்த தீர்­மா­னத்தின் மூலம் சுதந்­திர கட்­சியும் அதன் கொள்­கை­களும் பாது­காக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த கட்­சியின் உபசெய­லா­ளர்­களில் ஒரு­வ­ரான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

சுதந்­திரக்கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் பாது­காப்பு பிரச்­சினை காணப்­ப­டு­கி­றது. அதற்கு முகங்­கொ­டுக்க வேண்டும். இனப்­பி­ரச்­சி­னையும் இருக்­கி­றது. இலங்கை ஒரு பல்­லின சமூகம் வாழும் நாடாகும். பல இன, மத, கலா­சார மொழியைச் சேர்ந்த மக்கள் வாழும் பன்­மைத்­துவ நாடு. இத­ன­டிப்­ப­டையில் நாடு கட்­டி­­யெ­ழுப்பப­்பட வேண்டும் என்ற சவால் இருக்­கி­றது. அத்­துடன் பொரு­ளா­தார பிரச்­சி­னையும் இருக்­கி­றது.

இந்த சூழ்­நி­லை­யி­லேயே ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. நாங்கள் பல விட­யங்­களை பரி­சீ­லித்­த­மை­யி­னா­லேயே ஜனா­தி­பதித் தேர்­தலில் முடி­வெ­டுப்­ப­தற்கு காலத்தை எடுத்துக் கொண்டோம். இது நாட்டின் நன்மை கரு­தி­யே­யாகும். எவ்­வாறு இப்­பி­ரச்­சி­னை­களை தீர்க்க முடியும் என்று சிந்­தித்தே இந்த முடி­வுக்கு வந்­துள்ளோம்.

நாட்டின் இறை­மையை மக்­களின் நல்­வாழ்வை உறு­திப்­ப­டுத்தக்கூடிய சிறந்த நபர் யார் என்று சிந்­தித்தே இந்த முடிவை எடுத்தோம். கட்­சியினதும் நாட்டு மக்­க­ளினதும் நலன் கரு­தியே ஜனா­தி­பதித் தேர்தல்  தொடர்பில் சிந்­திப்­ப­தற்கு சில வாரங்கள் எடுத்துக்கொண்டோம். இத­ன­டிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஆலோ­சித்து கோத்தபாயவை ஆத­ரிப்­பது என்ற முடிவை எடுத்­துள்ளோம்.

கோத்தபாய ராஜ­ப­க் ஷ நாட்­டுக்கு புதி­யவர் அல்ல. சிறந்த நிர்­வா­கி­யாவார். அத்­துடன் நாடு இக்­கட்­டான நிலை­மையில் உள்ளபோது பாது­காப்பு செய­லா­ள­ராக பணி­யாற்றி சிறந்த பலா­ப­லனை நாட்டு மக்­க­ளுக்கு பெற்றுத்தந்­தவர். அவர் இவ்­வா­றான சகல சவால்­க­ளையும் எதிர்கொண்டார். அவர் நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் மதிப்­ப­வ­ராவார். எனவே தான் சு.க அவரை ஆத­ரிக்க தீர்­மா­னித்­தது.

கோத்தபாயவை ஆத­ரிப்­பதில் ஐக்­கி­ய­மா­கவே இருக்­கின்றோம். இதில் தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரல் என்று எதுவும் இல்லை. சு.க.வும் அதன் கொள்­கை­களும் இம்­மு­டிவின் மூலம் பாது­காக்­கப்­பட்­டுள்­ளது. நாட்­டுக்கு முன்­னு­ரிமை கொடுத்து இம்­மு­டிவை எடுத்துள்ளோம். நாட்டின் பன்முகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்படும்.

பாரிய வெற்றி பெறுவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதன் அடிப்படையில் நாடும் மக்களும் வளம் பெறுவர் என்றார்.