கோத்தாபயவிற்கு ஆதரவாகவே ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டி – மரிக்கார்

256 0

கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து சஜித் பிரே­ம­தா­சவுக்குக் கிடைக்­கக்­கூ­டிய வாக்­கு­களை  சிதைப்­ப­தற்­காக பசில் ராஜ­ப­க் ஷவின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருக்­கிறார். கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ ­வுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்ற முஸ்­லிம்கள் தேசப்­பற்­றா­ளர்­க­ளா­கவும் ஆத­ரவு வழங்­கா­த­வர்கள் நாட்டைப் பிரிக்கும் துரோ­கி­க­ளா­க­வுமே சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றனர் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரி­வித்தார்.

ஐக்­கிய  தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில்  நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,

அண்­மைக்­கா­ல­மாக ஸ்ரீலங்கா பொது ­ஜன பெர­மு­ன­வினர், பெரும் தேசப்­பற்­றா­ளர்கள் என்ற போர்­வையில் இன,மத­வா­தத்தைத் தூண்டும் வகையில் செயற்­ப­டு­வதைக் காண­மு­டி­கின்­றது. நாட்டின் காணி­களும், சொத்­துக்­களும் வெளிநா­டு­க­ளுக்கு வழங்­கப்­பட்ட போது அமை­தி­யாக இருந்­த­வர்­களும், பெரு­ம­ள­வான ஊழல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுமே தற்­போது தேசப்­பற்­றா­ளர்கள் போன்று பேசு­கின்­றனர். ஆனால் உண்­மையில் என்ன நடந்­தது என்­பதை மக்கள் கண்­கூ­டாகப் பார்த்­தி­ருக்­கி­றார்கள். அவை தொடர்பில் அறி­வு­பூர்­வ­மாக சிந்­தித்து தீர்­மா­னிப்­பார்கள் என்­பது இன்­னமும் இந்த நாட்­டுப்­பற்­றா­ளர்­க­ளுக்குப் புரி­ய­வில்லை.

சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யானால் நாடு பிள­வு­­படும் என்றும், தனித்­த­னி­யான ஆட்சி நிர்­வாக உரிமை வழங்­கப்­படும் என்றும் கூறு­கின்­றார்கள். சஜித் பிரே­ம­தா­சவின் ஆட்சி என்­பது அபி­வி­ருத்­தி­யையும், புதிய கொள்கைத் திட்­டங்­க­ளையும் நோக்­கி­ய­தொரு யுக­மா­கவே அமையும். அப்­போதும் இலங்கை ஒரு­மித்த நாடா­கவே இருக்கும் என்­ப­துடன், பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­துடன், ஏனைய மதங்­களைப் பின்­பற்­று­வ­தற்­கான சுதந்­தி­ரமும் கௌர­வமும் வழங்­கப்­படும். முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­காக பேரு­வ­ளையில் ஒரு­வி­த­மா­கவும், தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­காக கிளி­நொச்­சியில் ஒரு­வி­த­மா­கவும் பேசு­கின்­ற­வர்கள் நாங்­க­ளல்ல.

கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து சஜித் பிரே­ம­தா­சவுக்குக் கிடைக்­கக்­கூ­டிய வாக்­கு­களை உடைப்­ப­தற்­காக பசில் ராஜ­ப­க் ஷ வின் ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருக்­கிறார். இவ்­வ­ளவு காலமும் அவ­ருக்கு எதி­ரா­கவும், அவ­ரு­டைய ஷரிஆ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதி­ரா­கவும் கடு­மை­யாகக் கருத்து வெளியிட்டு வந்த ரத்­ன­தே­ர­ருக்கு, தற்­போது ஹிஸ்­புல்லாஹ் தேசப்­பற்­றாளர் போன்று தெரி­கின்றார். கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்ற முஸ்­லிம்கள் தேசப்­பற்­றா­ளர்­க­ளா­கவும், ஆத­ரவு வழங்­கா­த­வர்கள் நாட்டைப் பிரிக் கும் துரோ­கி­க­ளா­க­வுமே சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றனர்.

 

அடுத்­த­தாக தற்­போது மஹிந்த ராஜ­ப­க் ஷ, கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ ஆகிய இரு­வரில் யார் வேட்­பாளர் என்­ப­திலும் அவ்­வப்­போது சந்­தேகம் ஏற்­ப­டு­கின்­றது. வேட்­பு­ம­னுத்­தாக்­கலின் பின்னர் எமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச தனது கருத்தை வெளியிட்டார். ஆனால் எதிர்த்­த­ரப்பில் மஹிந்த ராஜ­ப­க் ஷவே கருத்து வெளியி­டு­கின்றார். அவ­ருக்குப் பின்­னா­லேயே கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ இருக்­கின்றார். எனவே தான் உண்­மை யாரை வேட்­பாளர் யார் என்ற கேள்­வியை எழுப்­பு­கின்றோம்.

அனைத்து இன, மதங்­களைச் சார்ந்­த­வர்­களும் சமத்­து­வ­மாக ஒன்­றி­ணைந்து வாழக்­கூ­டிய ஒரு­மித்த இலங்­கையை உரு­வாக்கும் நோக்­கி­லேயே டீ.எஸ்.சேனா­நா­யக்­க­வினால் ஐக்­கிய தேசியக் கட்சி உரு­வாக்­கப்­பட்­டது. எனவே ஜனா­தி­பதித் தேர்­தலைப் பொறுத்­த­வரை தற்­போது இரண்டு பக்­கங்­களே உள்­ளன. அவற்றில் உண்­மை­யான நாட்­டுப்­பற்­றுடன் முன்­நோக்கிப் பய­ணிக்­கக்­கூ­டி­ய­வர்­களைப் பின்­பற்றிச் செல்­வதா அல்­லது தேசப்­பற்று என்ற போர்­வையில் அனைத்­து­வித ஊழல்களையும் செய்பவர்களை ஆத ரிப்பதா என்ற தீர்மானத்தை மக்களே மேற்கொள்ள வேண்டும். நாட்டுக்கு சிறந்த கொள்கையுடன் திட்டமிட்டுப் பணியாற்றும் தலைவரொருவரே தேவையே தவிர, சர்வாதிகாரியொருவர் தேவையில்லை.

யுத்த காலத்தில் மஹிந்த ராஜ­ப­க் ஷ, கோத்தபாய ராஜ­ப­க் ஷ இருவரும் குளிரூட்டப் பட்ட அறையில் தங்கியி ருந்தபோது பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவே யுத்தத்தை முன்நின்று நடத்தினார். அதற்கான கௌரவத்தை அவருக்கு வழங்கும் விதமாகவே இன்று சரத்பொன்சேகா எமது கட்சியின் உறுப்பி னராக இருக்கின்றார்.