கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 3 மாடிக் கட்டிடம்-கல்வி அமைச்சர் (காணொளி)

406 0

kilinochchi-c-entre-collegeகிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 3 மாடிக் கட்டிடம் அமைப்பதற்கு கல்வியமைச்சினால் நிதி வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

ஆனையிறவு அன்பின் தரிப்பிட புகையிரத நிலையத்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்ட பின்னர் உரையாற்றும்போது இதனைக் குறிப்பிட்டள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் ஆகியோர் விஜயம் செய்து பாடசாலைகளின் தேவைகள் குறித்து அதிபருடன் கலந்துரையாடிய பின்னர் அதிபரின் கோரிக்கைக்கேற்ப 3 மாடிக் கட்டிடம் அமைப்பதற்கேற்ப நிதி ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

3 மாடிக் கட்டிடத்திற்காக 5.5 மில்லியன் ரூபா கல்வியமைச்சினால் வழங்குவதற்கு கல்வியமைச்சினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.