ஆனையிறவு புகையிரத நிலையத்திறப்பு (காணொளி)

393 0

anaijiravuகிளிநொச்சி ஆனையிறவு அன்பின் தரிப்பிடம் புகையிரத நிலையம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் அபயசிங்கவினால் குறித்த புகையிரத நிலையம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது.

சமூக ஒன்றிணைவு, சகோதரத்துவம், அன்பு, பாசம், என்ற அடிப்படையில் அன்பின் தரிப்பிடம் ஆணையிறவு புகையிரத நிலையம் நேற்று முற்பகல் 11.58இற்கு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

தென்பகுதி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரால் அன்பளிப்பிற்காக வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஆனையிறவு புகையிரத நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது

மாணவர்களினால் 2 ரூபாய் சேமிப்பு நிதியும், ஆசிரியர்களால் 10 ரூபா வீதமும் அன்பளிப்பிற்காக வழங்கப்பட்ட நிதியிலிருந்தும், மேலதிக செலவினை கல்வி அமைச்சின் நிதியிலிருந்தும் மொத்தமாக 22 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்ட நிகழ்வில் தென்பகுதி மாணவர்கள் அனுராதபுரத்திலிருந்து புகையிரதம் மூலம் ஆனையிறவிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

தென்பகுதி மாணவர்கள் இருவாரங்களாக சொந்த செலவுக்காக பெற்றோரினால் வழங்கப்பட்ட நிதியில் நாளொன்றுக்கு 2 ரூபா வீதம் சேமித்த நிதியை புகையிரதம் அமைப்பதற்காக வழங்கியதுடன், இன ஐக்கியத்திற்குரியதாக ஆனையிறவு புகையிரத நிலையம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.