வேட்புமனுவில் ஜெயலலிதா பெருவில் அடையாளம்

365 0

29th_jayalalith_gh_3062726fகடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் சென்னையின் அப்பலோ மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், தமது கட்சியின் வேட்புமனு தாக்கலை பெருவிரல் ரேகை அடையாளம் மூலம் உறுதி செய்தார்.

ஜெயலலிதாவின் உடல் நலம் தேறிவருவதாக கட்சியினரும் மருத்துவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் வேட்பு மனு தாக்கலில் கையெப்பம் வைக்கும் அளவிற்கு அவருடைய உடல் நலம் தேறியிருக்கவில்லை.

நொவம்பர் 19ஆம் திகதி தமிழகத்தின் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கலில் ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகை பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.