கோத்தாபயவிற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அரசியல் சூழ்ச்சிகளும் தோல்வி-ஜீ. எல்.

269 0

பொதுஜன பெரமுனவின்  வெற்றிக்கான  பயணம் ஆரம்பித்து விட்டது.

எமது எதிர் தரப்பினர் தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்கள். பொதுஜன பெரமுனவின் வெற்றியை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அரசியல் சூழ்ச்சிகளும் இன்று  தோல்வியடைந்துள்ளது என பொதுஜன பெரமுனிவ்ன தவிசாளர் ஜீ. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் கன்னி  கூட்டம் இன்று அநுராதபுர  நகரில் இடம் பெற்றது. அங்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் வெற்றியை தடுப்பதற்காக அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும்   முன்னெடுத்த அனைத்து  சூழ்ச்சிகளும்  நீதித்துறையின் ஊடாகவே  தோற்கடித்துள்ளோம்.    பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக  கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு   அனைத்து  தகுதிகளும் காணப்படுகின்றது.  குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களுக்கே   இனி மக்களாணையினை பெற முடியாது.

மக்களுக்கு  சேவையாற்றிய  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் 30வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த   கோத்தாபய ராஜபக்ஷவிற்கு மீண்டும் மக்களாணையினை பெற்று ஆட்சியதிகாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து தகைமைகளும் காணப்படுகின்றது.

இனி  எவ்வித  தடைகளும் கிடையாது. வெற்றிப்பெறுவதே  இறுதியாக காணப்படுகின்றது.  நாடு தழுவிய ரீதியில் அனைத்து செயற்திட்டங்களையும் இன்று முதல் முன்னெடுத்து செல்வோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.