கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவித்தல்

322 0

epc-gh985565655கல்வியியல் கல்லூரியில் பயிற்சி பெற்று 2016ஆம் ஆண்டில் வெளிமாகாணங்களுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டு கடமையை பொறுப்பேற்காத, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவர்களை மாகாண கல்வி அமைச்சின் அலுவலகதிற்கு சமூகமளிக்குமாரு கோரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளது.

இன்று மற்றும் நாளை காலை 8.30 முதல் மாலை 4.30 வரையிலான காலப்பகுதியில் இவர்கள் சமூகமளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகமளிப்பவர்கள் நியமனக்கடிதத்தின் மூலப்பிரதி, கடமையைபொறுப்பேற்காததை உறுதிப்படுத்தும் கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகதிற்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.