மலைய மக்களின் வாழ்வியலில் பாரிய அபிவிருத்தி வேண்டுமானால் அதற்கு கல்வியை ஆயுதமாக்கிக்கொள்ள வேண்டும் என, கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தீபாவளி தினமான இன்று அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையக மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றபட்டவையாகவே காணப்படுகின்றன.
இந்தநிலை மாற்றம் பெற வேண்டுமானால் அனைவரும் சுயதொழிலை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மலையக மக்கள் மத்தியில் கல்வி முறையாக புகுட்டப்பட வேண்டும் எனவும் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.