கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் தொடருந்துடன் மோதிய பெண்ணொருவர் மரணமானார்.
சம்வத்தின் போது காயமடைந்த அவர், கொழும்பு தேசிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 68 வயதுயடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடுகஸ்தொட – ஹமன்கொட பிரதேசத்தில் ஆணொருவர் தடியொன்றினால் தாக்கப்படு கொல்லப்பட்டுள்ளார்.
வாக்குவாதம் ஒன்று முறுகல் நிலையை எட்டியபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.