ஈராக்கின் முக்கிய நகராக கருதப்படுகின்ற மொசூலில் நிலைகொண்டுள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கான மக்களை கடத்தி வைத்துள்ளமைக்கான உறுதியான தகவல்கள் தம்மிடம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மெசூல் நகரில் ஈராக்கிய அரச படைகள் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் ஐ எஸ் தீவிரவாதிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் ஐக்கிய நாடுகள் சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஈராக் இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் 190 பேரும் 42 பொதுமக்களும் ஏற்கனவே ஐ எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக மனித உரிமை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சிரியாவின் அலப்போ நகரில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளை மேற்குலக நாடுகள் திரிபு படுத்தி கருத்து வெளியிடுவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
சிரியாவில் ரஷ்யா வெறித்தனமான தாக்குதல்களை நடத்தி வருவதாக மேற்குலக நாடுகள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், தற்போது யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆயுததாரிகள் இடையூறு விளைவித்து வருவதாகவும் ரஷ்ய குறிப்பிட்டுள்ளது.