போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டில் 265 பெண்கள் கைதுசெய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதை பொருள் வர்த்தகத்தில் ஆண்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுகின்ற நிலையில், பெண்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.