கட்டுப்பணம் செலுத்தியும் வேட்புமனு தாக்கல் செய்யாத ஆறு பேர்

227 0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர் கட்டுப்பணம்  செலுத்திய நிலையிலும் 35 பேர் மாத்திரமே வேட்பு மனு பத்திரங்களை சமர்ப்பித்தார்கள்.

அதன்படி வேட்புமனுக்கல் தாக்கல் செய்யாதோர் விபரம் வருமாறு

சமல் ராஜபக்ஷ

சமல் ராஜபக்ஷ  எம்.பி. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியும் இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை சமர்ப்பிக்கவில்லை.  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.

குமார வெல்கம

குமார வெல்கம சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியபோதும் இறுதியில் சுதந்தி கட்சியின் உள்ளக தீர்மானத்திற்கு  அமைய அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.

இவ்விடயம் தொடர்பில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாதுகாப்பு மையம் தெளிவுப்படுத்தல் அறிவித்தலை இன்றைய தினமே விடுத்திருந்தது.

மஹிபால ஹேரத் 

மஹிபால ஹேரத்  சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்திய நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

ஜயந்த லியனகே

சிங்கள தீப ஜாதிக பெரமுனவின் சார்பில் ஜயந்த லியனகே போட்டியிடுவதற்கான  கட்டுப்பணம் செலுத்தியும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

பசீர் சேகு தாவூத்

அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக பசீர் சேகு தாவூத் கட்டுப்பணம் செலுத்தியும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்படவில்லை.

குணபால திஸ்ஸகுட்டி ஆராச்சி

சுயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய குணபால திஸ்ஸகுட்டி ஆராச்சி வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.