மாணவர்களினால் சேகரிக்கப்பட்ட நிதியில் ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தத் தொடருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்தப் புதிய தொடருந்து நிலையத்தை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் திறந்துவைத்தார்.
ஆனையிறவு யுத்தத்திற்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த, உப்பு உற்பத்தி செய்யும் நிறுவனத்தைக் கொண்ட ஒரு கிராமமாகக் காணப்பட்டது. தற்போது அது முற்றுமுழுதாக சிறீலங்கா இராணுவத்தினரின் வசமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.