எத்தனை பேர் சத்துணவு உண்கின்றனர்? – தினமும் குறுஞ்செய்தி அனுப்ப ஊழியர்களுக்கு உத்தரவு

247 0

எத்தனை மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்ற விவரத்தை தினமும் குறுஞ்செய்தியாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்ப சத்துணவு ஊழியர் களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.

மாணவர்களுக்கு முறை யாக சத்துணவு சென்று சேர் வதை உறுதி செய்யும் வித மாக, சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக் கையை தினமும் குறுஞ்செய் தியாக (எஸ்எம்எஸ்) வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியது:

சத்துணவு பணியாளர்கள் மூலம் மாணவ, மாணவி யருக்கு சத்தான, சுவையான உணவுகள் வழங்கப்பட்டு வரு கின்றன. மாணவ, மாணவி யருக்கு சத்துணவு முழுமை யாக சென்று சேர்வதை உறுதி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் எண் ணிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள் தினமும் குறுஞ்செய்தியாக அனுப்பி வருகின்றனர். தற் போது சத்துணவு ஊழியர் களிடம் இந்த பொறுப்பு ஒப் படைக்கப்பட்டுள்ளது. எத் தனை மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்ற தகவலை தினமும் சத்துணவு பணியாளர்களே நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு குறுஞ்செய்தி யாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.