தலாய்லாமாவை அனுமதித்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்கும்: சீனா

405 0

201610282031468056_dalai-lamas-arunachal-visit-will-damage-ties-with-india_secvpfதிபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா அருணாச்சல பிரதேசம் மாநிலத்துக்கு செல்ல அனுமதித்தால் இந்தியா – சீனா இடையிலான உறவுகள் பாதிக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது.அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்ட காலமாக சிக்கல் நிலவி வருகிறது. அருணாச்சல் பிரதேச எல்லையில் சுமார் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு தெற்கு திபெத்தை சேர்ந்தது என்று சீனா கூறி வருகிறது.

இதனால் அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு இந்திய தலைவர்கள் வருகை புரியும் பொழுதெல்லாம் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு அழைப்பின் பேரில் தலாய்லாமா அங்கு செல்கிறார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் வருகை புரிந்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இருப்பினும் தலாய்லாமாவின் வருகைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தலாய்லாமா நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்லலாம். அருணாச்சல பிரதேசத்திற்கு மீண்டும் அவர் செல்வதற்கு  எவ்வித தடையும் இல்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தலாய் லாமாவின் அருணாசலப் பிரதேசப் பயணம் எல்லைப்பகுதிகளில் நிலவும் அமைதி மற்றும் நிரந்தரத்தன்மையையும், இந்தியா – சீனா இடையிலான நட்புறவையும் சேதப்படுத்தும் என சீன வெளியுறவுத்துறை செயலாளர் லு காங் இன்று எச்சரித்துள்ளார்.