ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்த போதிலும் இன்று 10 வது நாளாகவும் வேலைநிறுத்தம் தொடர்கின்றதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
அத்தோடு அரசாங்கம் இதற்கான தீர்வினை கலந்துரையாடல்கள் மூலம் பெற்று தருமாயின் தனது வேலை நிறுத்தத்தை கை விடுவதற்கு தயாராக உள்ளதாக ரயில்வே வழிகாட்டல்களின் செயலாளர் மனுரா பியர்ஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வாறு தொடர்வேலை நிறுத்தத்தில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபடுவார்களாயின் அவர்கள் வேலையை விட்டு விளகியர்வர்கள் என அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.