5 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்த இந்திய வம்சாவளி டாக்ஸி ஓட்டுநர்

305 0

ஆஸ்திரேலியாவில் சைக்கிளில் வந்தவரை இடித்து கீழே தள்ளிய வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ரத்தானதை அடுத்து 2 ஆண்டுகள் சமூக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குர்பேஜ் சிங் (29), 2017 டிசம்பரில் பிளின்டர்ஸ் தெருவில் இருந்து கண்காட்சி தெருவுக்கு திரும்பும்போது ஒரு சிக்னலில் சைக்கிள் வந்தரை இடித்து கீழே தள்ளியதாக வழக்குத் தொடரப்பட்டது. ஆஸ்திரேலிய சட்டப்படி இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களுக்கு 5 ஆண்டு சிறைத்தன்டனை அனுபவிக்க வேண்டிவரும். குற்றத்தை அவர் ஒப்புக் கொண்ட நிலையில் சிறைத்தண்டனைக்குப் பதில் சமூக சேவை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது.

விக்டோரியா கவுண்டி நீதிமன்ற நீதிபதி பால் லகாவா இன்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

 

சம்பவ தினத்தன்று சிவப்பு விளக்கு எரியத் தொடங்கியதை கவனிக்காமல் தனக்கு முன்பாக சைக்கிளில் நின்றிருந்தவரை மோதி கீழே தள்ளியுள்ளார்.

சைக்கிள் சேதமாகி கீழே விழுந்தவருக்கு ஏற்பட்ட காயங்கள் அவரது வாழ்க்கையை குறிப்பிடத்தக்க அளவில் பாதித்தன, மேலும் அவரது குடும்பத்தினரையும் பாதித்தன என்பதையும் பார்க்கவேண்டும்.

இதில் குற்றத்தன்மை குறைவாக உள்ளது என்பதால் இதற்கு சிறைவாசம் தேவையில்லை. ஆனால் சிங்கிற்கு இரண்டு ஆண்டு சமூக சேவை செய்ய உத்தரவிடப்படுகிறது. இதன் மூலம் அவர் 100 மணிநேர ஊதியம் பெறாத சமூகப் பணிகளை முடிக்க வேண்டும்.சிங் இரண்டு ஆண்டுகளாக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் சைக்கிள் ஓட்டுநரின் பைக்கை மாற்ற 2,814 டாலர்கள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பால் லகாவா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.