சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாக்க மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்

354 0

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாக்க மாண வர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சுற்றுச்சூழல் சேவை கொண்டாட்ட விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை வளாகத்தில் நேற்று நடை பெற்றது.

சிறப்பு விருது

இதில் சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு பணிகளில் சிறந்து விளங்கி யமைக்காக சென்னை ராயப் பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜி.தங்கராசுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும், விழாவில் ‘மதம் மற்றும் சூழலியல்’ என்ற தலைப்பிலான புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந் தினராக கலந்துக்கொண்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியதாவது:

சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் மூலம் சுற்றுச்சூழல் பாது காப்பு தொடர்பான விழிப்புணர்வு பணிகள் கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்த பணிகள் மேலும் தொடர வேண்டும். இயற்கை மற்றும் உயிர் சூழலியல் அமைப்பை பாதுகாக்க வேண்டி யது மிக அவசியம். ஒரு காட்டில் புலி பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே அந்த வனத்தின் வளம் காக்கப்படும்.

புலிகள் பாதுகாப்பு

அதனால்தான் புலிகளின் பாது காப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. உயிர் சூழலியல் அமைப்பு சரியாக நடைபெற வேண்டியதன் அவசியம் மற்றும் இயற்கை வளங்களை பாது காப்பதன் முக்கியத்துவம் பற்றிய புரிதல்களை விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் இன்றைய தலை முறை மாணவர்களுக்கு ஆசிரி யர்கள் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சிபிஆர் சுற்றுச் சூழல் கல்வி மைய இயக்குநர்கள் பி.சுதாகர், நந்திதா கிருஷ்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.