இலவச கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதில், இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி 2018-19-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள எல்கேஜி, யுகேஜி, 1-ம் வகுப்பு குழந்தை களுக்கு தலா ரூ.11,947 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இரண்டாம் வகுப்புக்கு ரூ.11,895, மூன்றாம் வகுப்புக்கு ரூ.12,039, நான்காம் வகுப்புக்கு ரூ.12,033, ஐந்தாம் வகுப்புக்கு ரூ.12,665, ஆறாம் வகுப்புக்கு ரூ.16,038, ஏழாம் வகுப்புக்கு ரூ.15,915 மற்றும் எட்டாம் வகுப்புக்கு ரூ.15,936 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரை வில் கல்விக்கட்டண பாக்கித் தொகை வழங்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே 2013-18-ம் கல்வி யாண்டுகளில் தனியார் பள்ளி களில் சேர்ந்த 4.83 லட்ச குழந் தைகளுக்கான கல்விக்கட்டணம் ரூ.644 கோடி, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.