பத்திரிகை விளம்பரம் மூலம் நிதி மோசடி

309 0

1415145586addபல்வேறு பிரதேசங்களில் பொது மக்களிடம் நிதி மோசடி செய்த சந்தேகநபரை கைது செய்வதற்காக அம்பாறை வலய விஷேட குற்றப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பதியதலாவ பிரதேசத்தில் பெண்ணொருவரால், அம்பாறை வலய விஷேட குற்றப் பிரிவினருக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

பத்திரிகை ஒன்றில் வௌியான விளம்பரம் ஒன்றின் படி கடன் பெறுவதற்காக, விளம்பரத்தில் காணப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறித்த பெண் தொடர்பை ஏற்படுத்திய போது, குறித்த கடன் தொகையை வழங்குவதற்காக 05 இலட்சம் ரூபா பணம் சந்தேகநபரால் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்தப் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், குறித்த சந்தேகநபர் வேறு பல நிதி மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.