விமானப் பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய் கைது

305 0

684784996arrstராஜகிரிய பிரதேசத்தில் விமானப் பணிப்பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

மின்னேரியா, ஹேன்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விமானப் பணிப்பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.