மன்னார், சிலாவத்துறை கடற்பகுதியில் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று இந்தியப் பிரஜைகளையும் எதிர்வரும் 2ம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
மன்னார், சிலாவத்துறை, அரிப்பு பிரதேசத்தில் 2 கிரோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடல் மார்க்கமாக அவர்கள் இந்தப் பேதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.