தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் 24 வயதுடைய பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவருக்கும் நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் குளிரினையும் பொருட்படுத்தாது கலந்துகொண்ட மக்கள் இவ்விரு யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான இப்படுகொலை தொடரும் சிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே வெளிப்படுத்துகின்றது என்று தெரிவித்ததோடு நிகழ்வின் இறுதியில் மனு ஒன்றையும் கையளித்தனர்.
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி