வடக்கு – கிழக்கு இணைப்புக்கு யாழ் முஸ்லிம்கள் எதிர்ப்பு -யாழ்.மாவட்ட முஸ்லிம் ஜக்கிய மக்கள் அமைப்பு-

395 0

img_0744வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு அக்கறை இல்லை என்று யாழ்.மாவட்ட முஸ்லிம் ஜக்கிய மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் மக்கள் இவ்விணைப்பு தொடர்பான இறுதி முடிவினை எடுப்பார்கள் என்றும் அவ்வமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை யாழ்.மானிப்பாய் வீதி ஜந்து சந்திப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் முன்றலில் யாழ்.மாவட்ட முஸ்லிம் ஜக்கிய மக்கள் அமைப்பினர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார்கள்.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களினால் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.
இருப்பினும் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிலர் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே அவ்வமைப்பின் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்:-
முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் ஆகின்றன. இருப்பினும் முஸ்லிம் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் 500 குடும்பங்கள் மட்டுமே உள்ள முஸ்லிம் மக்கள் வடக்க கிழக்கு இணைப்பு தொடர்பாக நாங்கள் முடிவு எடுக்க முடியாது. இம் முடிவினை கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் எடுப்பார்கள் என்று அவர்கள் வடக்கு – கிழக்கு மாகாண இணைப்புக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.