ராஜபக்ஷ குடும்பத்தின் செலவுகள் குறித்து விசாரணைகள் நடத்த வேண்டும் – அசாத் சாலி

209 0

கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூர் சிகிச்சைக்கும், நாமல் ராஜபக்ஷவின் திருமணத்திற்கும் எவ்வாறு அவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சுகயீனம் ஏற்பட்டால் சிங்கப்பூர் வைத்தியசாலையிலேயே சிகிச்சைப் பெறுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணம் 5 நாட்கள் பிரமாண்டமாக நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இவற்றுக்கெல்லாம் காசு வழங்குவது யார்? இதையெல்லாம் யாரும் கேட்டார்களா? சாமானிய மக்களுக்கு மாத்திரம் காணி அல்லது வாகனம் கொள்வனவு செய்தால் உடனடியாக வரிப்பணம் அறவிடுகின்றனர்.

எனவே ராஜபக்ஷ குடும்பத்தினரின் செலவுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட் வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.