இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், வாங்கல்களில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே வேண்டுகோள் விடுத்தார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை மத்திய வங்கி தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு கோப் குழுவிலுள்ள 16 பேர் ஆதரவு தெரிவித்தும் 9 பேர் ஆதரவளிக்கவுமில்லை. பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த அறிக்கைகளிலும்கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தற்போது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்துபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகப்புத்தகம் ஊடாக பதில் வழங்கியுள்ளார்.
நாட்டில் இடம் பெற்ற பல ஊழல்களை முதலில் நின்று வெளிப்படுத்துபவன் நானே தற்போது என்னைப்பற்றி தவறான கருத்துகள் கூறப்பட்டு வருகின்றது. நான் வெளிநாட்டு விஜயத்தினை மேற்கொண்டு நேற்றே (27) நாடு திரும்பினேன்.
இதன் காரணமாகவே என்னால் கோப் குழு அறிக்கையில் கைச்சாத்திட முடியவில்லை எவ்வாறாயினும் நல்லாட்சியின் செயற்பாடுகள் காரணமாக திருடர்கள் எவரும் தப்ப முடியாது அதற்கு பூரண ஒத்துழைப்பை நான் வழங்குவேன் எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவத்துள்ளார்.