சஜித் போட்டியிடுவது ஐ.தே.கட்சியை வெற்றியடைய செய்வதற்கு இல்லை-மொஹமட் முஸாமில்

228 0

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடைய செய்வதற்கு இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸாமில் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த போர்வையில் கட்சிக்குள் ரணிலுக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்து கட்சியின் தலைவர் பதவியை கொள்ளையடிக்கவே சஜித் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

கடந்த 2015 தேர்தலில் சந்ரகுப்த தேனுவர, காமினி வியன்கொட போன்ற டொலர்களுக்கு மாத்திரம் வேலை செய்யும் போலி சமூக ஆர்வலர்கள் மீண்டும் நல்லாட்சி தொடர்பில் கதைக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலால் நாட்டைக் காப்பாற்றக் கூடிய, சமூக இலட்சியம் கொண்ட ஒருவர் இருக்கும் போது குறித்த போலி சமூக ஆர்வளர்கள் கோட்டாபய ராஜபக்ஷ மீது வழக்கு தாக்கல் செய்து தமது வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த நான்கரை வருடங்களில் இந்த சமூக ஆர்வலர்கள் என அழைக்கப்படுபவர்கள் நல்லாட்சிக்காக முழக்கமிட்டனர், ஆனால் அந்த நேரத்தில் சட்டத்தை வளைக்கும் பொலிஸ்மா அதிபர், சொலிசிட்டர் நாயகம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆகியோர் உருவானதாக அவர் குற்றம் சுமத்தினார்.

தற்போது அலரிமாளிகை சட்டமா அதிபர் திணைக்களமாக மாறி அங்கு எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதாகவும் மொஹமட் முஸாமில் தெரிவித்துள்ளார்.