சிவனொளிபாத மலை பறிபோய் விட்டதா?

356 0

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88சிவனொளிபாதமலையின் வன பகுதியில் உள்ள சுமார் 82 ஏக்கர் நிலப்பரப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த இடத்தில் நட்சத்திர விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணி ஆகிய நகரங்களுக்கு இடையிலான நில பரப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்படுகின்ற முன்னணி கையடக்கத் தொலைபேசி நிறுவனமொன்றின் உரிமையாளர்களே இந்த காணியை கொள்வனவு செய்துள்ளதாக தெத்பிம் உருமய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சிவனொலிபாதமலையில் ஆதாமின் பாதங்கள் காணப்படுவதாக நம்பிக்கை ஒன்று உள்ளதாகவும், இதனை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய பக்தர்களை அங்கு அழைக்கும் நோக்கிலேயே இந்த நட்சத்திர விடுதி நிர்மாணிக்கப்படுவதாகவும் குறித்த அமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வனப் பகுதியில் உலங்குவானூர்தி ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டு, சிலர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்துக்களுக்கு சொந்தமான சிவனொளிபாதமலையானது “ஸ்ரீபாத” என்ற பெயரால் சிங்கள மக்களின் வழிபாட்டுத்தளமாக காணப்படுகின்ற நிலையில் தற்போது முஸ்லிம்களும் இதில் உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.