நாமலின் இரகசியங்களை அம்பலப்படுத்திய உபெக்ஷா சுவர்ணமாலி

356 0

upeksha-swarnamaliகடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக உபெக்ஷா சுவர்ணமாலி அதிகம் பேசப்பட்ட ஒரு கதாபத்திரமாகும்.

ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்புரிமையை பெற்றிருந்த உபெக்ஷா சுவர்ணமாலி, மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டார்.

இந்த நிலையில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவானவுடன் பிரபல தொலைக்காட்சியில் தனது அறியாமையை வெளியிட சென்று மக்களின் அதிருப்தியை பெற்றுக் கொண்ட சம்பவங்கள் அனைவரும் அறிந்த விடயம்.

தோல்விகளின் பின்னர் ஊடகங்களில் கருத்து வெளியிடுவதனை புறக்கணித்து வந்தவர் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முறையற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் வெளியிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உபெக்ஷா சுவர்ணமாலி கடந்த காலங்களில் நாமலுடன் அதிக நெருக்கமாக செயற்பட்ட ஒருவராவார்.

இந்நிலையில் நாமல் செல்லும் சுற்றுலாக்களுக்கு உபெக்ஷாவை அழைத்து சென்றது ஏன்? அவருக்கு உள்ள தகுதிகள் என்ன? அவற்றினை மக்களிடம் எவ்வாறு மறைத்தனர்? நாமல் ராஜபக்சவுக்கு அவசியமான வகையில் அரசாங்கம் செயற்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த ஜனவரி எட்டாம் திகதி ஏற்பட்ட மக்கள் புரட்சிக்கு பின்னரும் நாமல் தனது தேவைக்கமைய பல சலுகைகளை பெற்றுக் கொள்வதாகவும், இன்றும் உபெக்ஷா போன்ற பல பெண்களை தனது அரச பயணங்களின் போது அழைத்து சென்று அரசாங்க பணத்தை வீணடிப்பதாகவும் குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.