மத்திய வங்கியின் பிணை முறி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என நிரூபனமானது என்பதுடன் அதன் பின்னனியில் ரணில் விக்ரமசிங்க இருப்பது வெளிப்படையான உண்மை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் கோப் அறிக்கையில் மத்திய வங்கியில் நடைபெற்ற ஊழல்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
குறுகிய காலத்தில் மக்களுடைய பணத்தினை சூரையாடியுள்ளமை நிரூபனமான நிலையில் அதன் பின்னனியில் ரணில் இருக்கின்றார்.
நாட்டின் பாராளுமன்றம் என்பது சக்திமிக்கது என ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். அதனை நிரூபிப்பதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவாக கொள்ளப்படுகின்றது.
கோப் அறிக்கையின் பின்னனியில் ரணிலின் கருத்துக்காக கட்சிகள் மற்றும் மக்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் விமான நிலையங்களை மூடுவோம் என குறிப்பிட்ட இந்த அரசாங்கம் அனேகமான ஊழலில் ஈடுபட்டவர்களை தப்பிக்க விட்டுருக்கின்றது.
இந்த அரசாங்கமானது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினை போன்றதே. ஒரே இரத்தம் ஓடும் உடலின் இரு அங்கங்களை கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.