கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சொகுசு ஜீப் வண்டியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த ஜீப் வண்டி நேற்று மாலை வேளையில் மட்டக்களப்பில் வைத்து நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள வாகனம் திருத்தும் இடமொன்றில் இருந்தே கருணாவின் சொகுசு ஜீப் வண்டி கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் றி 2014. 2015 எனும் இலக்கமுடைய சொகுசு ஜீப் வண்டியை அதிரடியாக கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.