வடக்கில் உடனடியாக புலனாய்வுச் செயற்பாடுகளை அதிகரிக்கவேண்டும்!

315 0

625-500-560-350-160-300-053-800-900-160-90-2வடக்கில் உடனடியாக புலனாய்வுச் செயற்பாடுகளை அதிகரிக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கில் அண்மையில் நடந்த சம்பவமானது நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நான் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் எனது கருத்தை இந்த அரசாங்கம் தட்டிக்கழித்தது.

இந்நிலையிலேயே அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணத்துச் சம்பவம் இதனைச் சுட்டி நிற்கின்றது. எனவே நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வடக்கில் புலனாய்வுச் செயற்பாடுகளை உடனே அதிகரிப்பதோடு, காவல்துறை நிலையங்களையும் அதிகரிக்கவேண்டும். அத்துடன் இராணுவ முகாம்களையும் தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.